500 ரூபாய்க்கு 600GB 4ஜி டேட்டா: ஜியோவின் அடுத்த அதிரடி


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 20 நவம்பர் 2016 (15:09 IST)
ஜியோவின் வரவேற்பு சலுகை டிசம்பர் 31ஆம் தேதியோடு நிறைவு அடைவதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் 500 ரூபாய்க்கு ரூபாய்க்கு 4ஜி டேட்டா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
ஜியோ 4ஜி இந்தியாவில் இணையதள புரட்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ வரவேற்பு சலுகையாக 3 மாதத்திற்கு இலவச டேட்டா மற்றும் குரல் வழி சேவையை வழங்கியது.
 
அடுத்த ஜனவரி முதல் என்ன பிளான் என்று அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் ஜிகா நெட் என்ற வசதி மூலம் 500 ரூபாய்க்கு 600GB 4ஜி டேட்டா வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த திட்டத்தை பெறுவதற்கு இணையதள ரூட்டர் கருவி தேவை. இதற்கு முன்பணமாக 4000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :