1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மே 2017 (11:25 IST)

புகார்களை அளிக்கும் ஜியோ; ஆஃபர்களை அளிக்கும் ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம், தற்போது ஏர்டெல் கால் அழைப்புகள் மற்றும் டேட்டா பயன்பாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.


 
 
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் சுங்கவரி விதிகளை மீறுவதாக மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
 
புகார் அளித்ததை தொடர்ந்து ஏர்டெல் மீண்டும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. அவை...
 
# 4ஜி மொபைல் மற்றும் 4ஜி சிம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு  உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 1 ஜிபி மொபைல் இணையத்துடன் வழங்குகிறது. இவை அனைத்தும் ரூ.293-க்கு. 
 
# 4ஜி சிம் கார்டுடன் 4ஜி மொபைல் வைத்திருக்கும் புதிய சந்தாதாரர்களுக்கு மட்டும் 70 நாட்களுக்கு 1 ஜிபி தரவுத் வழங்கப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து ஜியோ மீண்டும் புகார் அளித்ததால், எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஜியோ தான். இவை முற்றிலும் ரிலையன்ஸ் ஜியோவின் நிலையான சூழ்ச்சி என ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.