வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (14:11 IST)

ஃபேஸ்புக் பயனாளர்களை கவனிக்கும் நாடுகள்: இந்தியா இரண்டாவது இடம்!

ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அவசர கோரிக்கைகள் வைத்து தகவல் பெறும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகளவில் மக்களால் ஃபேஸ்புக் செயலி அதிகளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபேஸ்புக் பயனாளிகளில் அரசுக்கு விரோதமாகவோ அல்லது சந்தேகிக்கும்படியாகவோ யாராவது பதிவிட்டால் அவர்கள் பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அவசர கோரிக்கை வைத்து உலக நாடுகள் பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஃபேஸ்புக்கிடம் அதிக அவசர கோரிக்கை வைக்கும் நாடுகளின் பட்டியலை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2019ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஃபேஸ்புக் பயனாளர்கள் தொடர்பாக இந்தியா மொத்தம் 22,684 கோரிக்கைகள் வைத்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 50,741 கோரிக்கைகளை வைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய மக்களின் ஃபேஸ்புக் செயல்பாடுகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருவது தெரிய வந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்படும் தகவல்கள் நம்பகமானவையா என்பது குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.