எத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6
ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பான திரையை வடிவமைத்து வரும் கார்னிங் நிறுவனம் தற்பொது கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் பயன்படுத்துவர்கள் அடிக்கடி தங்களது மொபைல் போனை கீழே தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி மொபைல் போன்கள் கீழே விழும் போது போனின் திரை சிதைவடைகிறது. இதனால் தொடு திரை மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவதுடன் அதற்கான செலவும் அதிகமாக உள்ளது.
ஸ்மார்ட்போன் வருவதற்கு முந்தைய மொபைல் போன்கள் கீழே விழுந்தால் எளிதில் உடையாது. ஆனால் இப்பொது உள்ள ஸ்மார்ட்போன்கள் எல்லம் பெரிய திரைகள் கொண்டவையாக உள்ளன. அதுவும் தொடு திரை. இந்த திரை மொபைல் போன் கீழே விழும் போது சிதைவடையாமல் இருக்க அதற்கென ஸ்க்ரீன் கார்டு உள்ளது.
டெம்பர் கிளாஸ் ஒட்டுவதன் மூலம் தொடு திரை சிதைவை தடுக்கலாம். தற்பொது புதிதாக சந்தையில் மொபைல் போன்களுக்கு ஏர்பேக் விற்பனையாக உள்ளது.
இந்த ஏர்பேக் மொபைல் போன் கீழே விழும் அதை பாராசூட் போல பாதுகாக்கும். இருந்தாலும் மொபைல் போன்களுக்கு திரை தயாரிக்கும் நிறுவனமான கார்னிங், கொரில்லா கிளாஸ் என்ற திரையை தயாரித்து வருகிறது.
பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் அனைத்து இந்த நிறுவனத்தின் கொரில்லா கிளாஸைதான் பயன்படுத்துகின்றனர். தற்போது கார்னிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால் எத்தனை முறை கீழே விழுந்தாலும் திரை உடையாது. இது கொரில்லா கிளாஸ் 5-ஐ விட மிக சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கிழே 1 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் மட்டுமே உடையாது.
கார்னிங் நிறுவனம் குறிப்பிட்டுள்ள உயரம் அளிவில் இருந்து எத்தனை முறை கிழே விழுந்தால் உடையாது. கொரில்லா கிளாஸ் 5-யில் ஒருமுறை அல்லது இருமுறை அவ்வளவுதான் அதற்கு மேல் கீழே விழுந்தல் திரை சிதைவடைந்துவிடும்.
இந்த கொரில்லா கிளாஸ் 6 விரைவில் அடுத்து சந்தையில் வரும் உயர் ரக ஸ்மார்ட்போன்களில் இருக்க வாய்ப்பு உள்ளது.