1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:23 IST)

வருவாய் + வரவேற்பு: கேப்பில் அடிக்கும் BSNL!!

பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்க இருக்கிறது.
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகியவை சமீபத்தில் பிரிபெய்டு கட்டணங்களை உயர்த்திய நிலையில் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றனர். 
 
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பை கணக்கில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளது. இதற்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீட்டில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
 
செப்டம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் பி.எஸ்.என்.எல். சொத்து மதிப்பு ரூ. 1,33,952 கோடி, எம்.டி.என்.எல். நிறுவன சொத்து மதிப்பு ரூ. 3,556 கோடி ஆகும். ஆனால், 4ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவன வருவாய் ரூ. 900 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்க இருக்கிறது.