1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (18:45 IST)

JIO -க்கு டஃப் கொடுக்கும் BSNL : ’இத்துனை ’நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை ...

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கியுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், சில ஆயிரம் ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து விருப்ப ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது.
 
அதில், 210 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
அத்துடன்,  வாடிக்கையாளர்களுக்கு ரிங்டோன் இரண்டு மாதங்களுக்கு ஃபிரியாக வழங்க்கப்படுகிறது. ஆனால் இதில் அன்லிமிட்டேட் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகிய பலன்கள் வழங்கப்படவில்லை என தெரிகிறது. மேலும், தினமும் டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவின் வேகம் 80 Kbps குறைக்கப்படும் என தெரிகிறது.

 
இதற்கு முன்னதாக, பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ. 997 விலையில் வாய்ல்கால், டேட்டா, மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படுகிறது. அதில் சிலருக்கு  3 ஜிபி டேட்டா கூட வழங்கப்படுகிறது. அத்துடன் ரு365 மற்றும் ரூ.97 விலையில் சலுகைகளையும், முன்னதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.