ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (14:24 IST)
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் புதிய திருத்தப்பட்ட பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

 
 
இந்த திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீ பெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆகிய அதன் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும்.
 
ஒரு மாத காலம் வாடிக்கையாளர்களுக்கு எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து 300 எம்பி தரவும் வழங்கும் இந்த திட்டத்தை 6 மாத காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.144 என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ரூ.99 மற்றும் ரூ.339 பேக் தொகுப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதை தவிர்த்து பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 40,000 வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவுதல் உட்பட பல முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :