பயனர்கள் ஏமாற்றம்...113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள் நிறுவனம் !

apple
Sinoj| Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (23:10 IST)

ஆப்பிள்
நிறுவனத்தில் தயாரிப்புகள் உலகமெங்கும் பிரபலம். இந்நிலையில், இதன் தயாரிப்பான ஐபோன்6, ஐபோன்7, ஐபோன் எஸ்.இ. ஆகிய மாடல்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதன் பேட்டரிகளின் திறன் குறைந்தது.


இந்தப் பேட்டரிகளை அதிகரிப்பதற்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை ஆப்பிளி வெளியிட்டது.

இந்தச் சாப்ட்வேரை அப்டேட்
செய்த பின்னரும் வாடிக்கையாளர்களின் ஐபோன் செயல் வேகம் பாதிக்கப்பட்டது.
அதனால் புதிய போன் வாங்க வாடிக்கையாளர்களின் எண்ணம் சென்றது.

இந்நிலையில் வேண்டுமென்றே பழைய போனில் பேட்டரி செயல்திறன்மை குறைந்ததாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்காவில் 33 மாகாண அரசுகளின் ஒழுங்குமுறை ஆணையர்கள் வழக்குத்தொடுத்துள்ளனர். இதற்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதில், இதன்மூலம் பேட்டரி செயல்திறனைக் குறைத்ததற்காக 113 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஆப்பிள் நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டை 33 மாகாண அரசுகளுக்குச் செலுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :