1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:03 IST)

5ஜி சேவையை தொடங்குவது எப்போது? ஏர்டெல் தகவல்

Airtel
5ஜி  ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதிகபட்சமாக ஏலம் எடுத்துள்ளது என்பதும் இரண்டாவதாக ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்து உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் 5ஜி சேவையை இம்மாத இறுதியில் தொடங்க ஏர்டெல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது
 
பாரதி ஏர்டெல் நிறுவனம் நோக்கியா சாம்சங் எரிக்சன் மொபைல் போன் நிறுவனங்களுடன் இணைந்து பல அமைப்புகளை நிறுவி வருவதாகவும் இந்த பணிகள் முடிந்தவுடன் 5ஜி சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
முதல்கட்டமாக டெல்லி ஐதராபாத் பெங்களூரு உள்பட ஒரு சில நகரங்களில் 75 ஆம் ஆண்டு விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது