1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (20:50 IST)

மக்களே! ஃப்ளிப்கார்டில் 80 % ஆப்பர் ...ஆர்டர் பண்ணு கொண்டாடு

இன்றைய நவீன உலகில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று அவர்கள் கேட்கும் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. 
நம் இந்தியாவிலும் இந்த இணையதள விற்பனை நிறுவனமாக அறியப்பட்ட அமேசானுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளதுதான் ஃபிளிப்கார்டு நிறுவனம். 
 
இணையதள விற்பனை சேவை நிறுவனமான ஃபிளிப்கார்ட்(FLIPKARD) கம்பெனி கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இதில் 30000 ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள்.
 
வாடிக்கையாளர்கள் நேரடியாக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதால் விலை மிக அதிகமாக இருக்கும். அதுவே இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கினால் ஷோரூமில் வாங்குவதைவிட விலை சற்று குறைவாக இருக்கும்.
 
இதை இன்றைய இளைஞர்கள் நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுகிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது ஃபிளிப்கார்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 80% வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு சலுகை விலை விற்பனையை அறிவித்துள்ளது. 
 
என்றுமில்லாத வகையில் தற்போது தங்களிடம் ஆர்டர் செய்து எடுக்கும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 80% ஆபரை அறிவித்துள்ளது ஃபிளிப்கார்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.