1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இஸ்லாம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:17 IST)

ரமலான் மாதம் கடைப்பிடிக்கப்படும் உண்ணா நோன்பின் சிறப்புக்கள் !!

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.


இஸ்லாமிய நாள்காட்டியின்படி 9-வது மாதமான ரமலானில் இஸ்லாமியர்கள் அனைவரும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறையும் வரை நோன்பிருப்பார்கள். இறைத்தூதர் முஹம்மது மூலம் மனிதர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் இறைவன் அருளியது திருக்குர்ஆன் என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் பிறை தெரிந்தது முதல் 30 நாட்களுக்கு நோன்பு நோற்று அதன் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர்கள்.

மேலும் தான் உழைத்துத் தேடிய செல்வத்தில், நாற்பதில் ஒரு பங்கை, ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்பவரும், பெறுபவனின் தேவையறிந்து அவன் வாய் திறந்து கேட்பதற்கு முன்பே தருபவன் உதவ வேண்டும் என உதவுபவரும்தான் உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியும் என்று, தானத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

இஸ்லாமில் கடைப்பிடிக்கப்படும் இந்த உண்ணா நோன்பு, மனிதனை இறைவனுடன் இணைப்பதுடன், உடலையும் அதன் இயக்கத்தையும், ஒட்டுமொத்த வாழ்வையும் வலிமைப்படுத்துகிறது.