MI vs RR - பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையப்போவது யார்?
ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு.
ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் 51வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.