1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 20 மே 2015 (19:40 IST)

தோனிக்கு 10 சதவீதம் அபராதம்; நடுவரின் தீர்ப்பு குறித்து விமர்சனம்

டுவைன் ஸ்மித்திற்கு நடுவர் கொடுத்த தீர்ப்பை பொது இடத்தில் விமர்சனம் செய்ததால் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

 
8ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. மும்பை அணியிடம் சென்னை நேற்று 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
 
போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது டுவைன் ஸ்மித்துக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொதுமேடையில் தோனி தெரிவித்தார். டுவைன் ஸ்மித்திற்கு நடுவர் தவறான தீர்ப்பளித்தது குறித்து எதிர்ப்பு கருத்தை வெளியிட்ட கேப்டன் தோனிக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.