செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (11:04 IST)

செப். 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எதிர்ப்பு!

ஐபிஎல் போட்டிகளை துவங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் நிலவரம் தீவிரமடைந்து வருவதால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமலே உள்ளன. அதேசமயம் வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது, பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.
 
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
டிசம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நவம்பர் மாத துவக்கத்திலேயே போட்டியை நடத்தி முடிக்க வேண்டும் என பிசிசிஐ எண்ணுவதாக தெரிகிறது.