ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2017 (18:21 IST)

14.5 கோடிக்கு ஏலம் போன வீரர்: அதிர்ச்சியில் இந்திய வீரர்கள்

10வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணி நிறுவனங்களும் தங்களது அணி வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்து வருகின்றனர். 


 

 
10வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிறது. இந்த் போட்டிகள் மே மாதம் 21ஆம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணி நிறுவனங்களும் தங்களது அணி வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்து வருகின்றனர். இந்த போட்டிகான வீரர்கள் ஒவ்வொரு அணி நிறுவனங்களாலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக மவுஸ் கிடைத்துள்ளது. இந்திய வீரர்களை வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
 
இன்று மதிய இடைவேளை வரை 108 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர். இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்   பென் ஸ்டோக்ஸ் என்பவரை ரூ.14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஅல் வரலாற்றில் ரூ.14.5 கோடி ஏலம் போன ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
மேலும் வெளிநாட்டு வீரர்கள் இதுவரை இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.