Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை பெங்களூரு அணி தோற்கடிக்குமா?

Updated: திங்கள், 7 மே 2018 (15:12 IST)
11-வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை, பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
 
ஐபில் தொடரின் 39-வது ஆட்டம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது பத்தாவது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் பெங்களூரு அணி எஞ்சிய லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும், இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

அடுத்த கட்டுரையில்
Show comments