திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:41 IST)

கோலி இஸ் பேக்: பலம் பெருகுமா பெங்களுர் அணிக்கு?

கோலிக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் களமிறங்கவில்லை. 


 
 
பெங்களூர் அணியின் கேப்டனான கோலி, முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கோலி ஐபிஎல் போட்டிக்கு திரும்புவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
 
விராட் கோலி மீண்டும் போட்டியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றிருப்பதாகவும் பெங்களூரில் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கோலி பங்கேற்பார் என தெரிவித்துள்ளது. 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் கோலியின் வருகை அணியின் வெற்றிகளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.