வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (22:06 IST)

எளிதான இலக்கை கொடுத்த ஹைதராபாத்; வெற்றி பெறுமா மும்பை?

ஹைதராபாத் - மும்பை அணிகள் இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.


 

 
ஐபிஎல் சீசன் 10 தொடரின் லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது. வார்னர் அதிகபட்சமாக 49 ரன்கள் குவித்துள்ளார். தவான் 48 ரன்கள் குவித்துள்ளார். மற்ற அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே குவித்தனர்.
 
இதையடுத்து தற்போது மும்பை அணி 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்க உள்ளது. எளிதாக இலக்கு என்பதால் மும்பை அணி வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்புள்ளது.