1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
  4. IPL2017 - Gambir and Uthappa Continous Hits makes Kolkata wins

தொடர்ந்து முன்னிலையில் கொல்கத்தா; அதிரடி காட்டும் கம்பீர்

கொல்கத்தா
இன்று நடைப்பெற்ற டெல்லி எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் இன்று நடைப்பெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
 
ராபின் உத்தப்பா மற்றும் கேப்டன் கம்பீர் ஆகியோரின் அதிரடியால கொல்கத்தா எளிதாக வெற்றிப் பெற்றது. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா 7 போட்டிகளில் வெற்றுப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 
கேப்டன் கம்பீர் தொடர்ச்சியாக எல்லா போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். கொல்கத்தா அணி எதிர் அணியின் ஸ்ரோரை எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்று விடுகின்றனர்.
 
இந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன்சிஷ் கோப்பை பெறும் வாய்ப்பு கொல்கத்தா உள்ளது. 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை பந்தாடியது கொல்கத்தா