ஐபிஎல் கனவு அணியை வெளியிட்ட கங்குலி மற்றும் கிளார்க்!!
சவுரவ் கங்குலி மற்றும் மைக்கெல் கிளார்க் தங்களது ஐபிஎல் கனவு அணியை தனித்தனியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
கங்குலி வெளியிட்டுள்ள கனவு அணியில் விராட் கோலி, கம்பிர் ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், நிதிஷ் ராணா, மணிஸ் பாண்டே, ரிஷப் பந்த், சுனில் நரேன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கிளார்க் வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணியில் கோலி, வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், ஹர்பஜன் சிங், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, பும்ரா, ஜாகிர் கான், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கங்குலி வெளியிட்டுள்ள அணி சில காரணங்களுக்காக வெறும் கனவு அணியாக தான் உள்ளது. ஆனால், கிளார்க் வெளியிட்டுள்ள அணி நிறைவான கனவு அணியாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.