ரொ‌ட்டி தயிர் வடை

Mahalakshmi| Last Modified திங்கள், 6 ஏப்ரல் 2015 (11:17 IST)
தேவையான பொருட்கள்:

ரொ‌ட்டி து‌ண்டுக‌ள் - 12
தயிர்-3 கப்
தக்காளி சா‌ஸ் - 1/4 கப்
புதினா சட்னி - 1/4 கப்
ஓமப்பொடி - 1 கப்
செய்முறை:

ரொ‌ட்டி து‌ண்டுகளை வடை அள‌வி‌ற்கு வட்ட வட்டமாக ஒரு டிப‌ன் பா‌க்‌ஸ் மூடி அல்லது க‌த்‌தி கொண்டோ வெட்டிக் கொள்ளவும்.

பின் ஒரு தோசைக் கல்லின் மேல் சிறிதளவு நெய் விட்டு அல்லது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக பொ‌றி‌க்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பொ‌‌றி‌க்க வே‌ண்டா‌ம்.

பின் ஒரு பேசினில் தயிர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் பொறித்த ப்ரெட் துண்டுகளைப் போட்டு ஊறவைக்கவும். பின் கொத்தமல்லி, தக்காளி சா‌ஸ், புதினா சட்னி, ஓமப்பொடி முதலியவைகளைத் தூவி அலங்கரிக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :