வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sasikala

கோவைக்காய் வறுவல்

கோவைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:
 
கோவைக்காய் - 1/4 கிலோ
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 
 
பொடி  தயாரிக்க:
 
முந்திரி - 2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 1
கரம் மாசாலா -1/4 டீஸ்பூன்
 
செய்முறை:
 
கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது எண்ணெயில் பொரிக்காமல் நான்ஸ்டிக் காடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து கொள்ளலாம்.
 
பொடிக்க பொருட்களில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.
 
காடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய், தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.