வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 30 ஜூன் 2014 (11:28 IST)

கிச்சன் டிப்ஸ்

  • கீரையை சமைக்கும் போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
  • கேக் செய்வதற்கு முன் 10, 15 நிமிடங்கள் ஓவனை சூடாக்கவும். அதன் சூட்டின் அளவை அறிந்துக்கொள்ள சிறிய அளவு மாவைக்கொண்டு முதல் குக்கீஸ் செய்து பார்க்கலாம்.
  • வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு முதல் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்து பின்னர் பிரீட்ஜில் வைக்கலாம்.
  • சப்பாத்தி மாவை தயாரிக்கும் போது தயிர் அல்லது முட்டை சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  • தயிர் செய்ய வேண்டும். ஆனால் பால் உறை ஊத்த தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.