எல்லோரா குகையின் அதிசயங்கள்

FILE
குடையும் காலங்களில் இந்தப்பாறைகள் அவ்வளவு திண்மையாக இருக்கவில்லை இதனால் குடைவு ஓரளவுக்கு எளிதாக இருந்தது. நாளாக நாளாகவே இது இறுகியுள்ளது.

இந்தப்பாறைக் குடைவுகளின் மடம் போன்ற அல்லது கோயில் போன்ற அமைப்புகளினால் மத இயக்கங்களின் செயல்பாடுகள் இங்கு அதிகம் இருந்தது. மகாராஷ்டிராவில் மட்டும் பல்வேறு அளவில் சுமார் 1200 குகைகள் உள்ளன. இதில் 900 குகைகள் பவுத்த மதம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய நூற்றாண்டுகளில் எல்லோராவின் முக்கியத்துவம் அப்பகுதியில் ஆட்சி செய்த சதவாகனர்கள் காலத்து நாணயங்களை வைத்து பேசப்பட்டு வந்தது. சதவாகனர்கள் தங்களது தலைநகாராக தற்போது பைத்தான் என்று அழைக்கப்படும் நகரைக் கொண்டிருந்தனர். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எல்லைப்பகுதிகளில் சதவாகனர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்ததாக கூறப்படுகிறது.

பண்டைய வர்த்தக வழித்தடங்களின் மையத்தில் எல்லோரா இருந்துள்ளது. ஆனாலும் இந்த வர்த்தக நடவடிக்கைகளால் எல்லோரா பெரிதாக மாறிவிடவில்லை. இந்த வர்த்தக மைய பகுதியினால் அருகில் இருந்த நாசிக், அஜந்தா குகை போன்றவை பெரிதும் வளர்ந்தன.

FILE
எல்லோராவில் அதன் பிறகு பவுத்தம், இந்துமதம் மற்றும் ஜைன மதம் ஆகியவை எல்லோரா குகைகளை குடைந்து கலை ஓவியங்களை உருவா‌க்கினர். மலைத்தொடரில் சுமார் 100 குகைகள் உள்ளன. இதில் 34 குகைக‌ள் மட்டுமே பயணிகளை ஈர்த்துள்ளது. இதில் எண் ஒன்று முதல் 12 வரையிலான குகைளில் பவுத்தக் கலைகளை காணலாம். குகை எண் 13 முதல் 29 வரை இந்து அல்லது பிராம‌ணிய கலைப் படைப்புகளை காணலாம். 30 முதல் 34ஆம் குகைகள் ஜைன மதம் சார்ந்தவை.

எல்லோரா குகை கி.பி. 19ஆம் நூற்றாண்டில் ஹோல்கர்கள் என்பவர்களது உரிமையின் கீழ் வந்தது. பிறகு ஐதராபாத் நிஜாம் ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது.

அனைவரும் பார்த்து மகிழ்ச்சியடைந்து, பிரமித்துப் போகவேண்டிய ஒரு தலம்தான் எல்லோரா எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.

இதில் மேலும் படிக்கவும் :