வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (00:14 IST)

தக்காளி பழத்தில் சருமத்தை பராமரிக்க..!!

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச்சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். சரும எரிச்சலை  தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
தக்காளியை சிறு துண்டுகளாக்கி பள்ளமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் கழுவி வேண்டும். அப்படி செய்து வந்தால், பள்ளம் கொஞ்சம்  கொஞ்சமாக சுருங்கும். ஏனென்றால் தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும், இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம்.
 
தக்காளி பழத்தில் லைகோபைன் எனும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. ஆதலால் தக்காளி பழத்தின் சாற்றினை சருமத்தில் தடவி உலர வைத்தால் சிறந்த  சன் ஸ்கிரீன் போன்று செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும். தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக  வைத்திருக்க முடியும்.
 
தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.
 
தக்காளியை கொண்டு பேஸ்பேக் போட நினைத்தால் தக்காளி சாறுடன் சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்  ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தின் அழகு மேம்பட்டிருக்கும் என்பதை  உணரலாம்.