1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Anandakumar
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (00:43 IST)

நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரிக்கை

பெரியார் நகரில் நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரி நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரிடம் கோரிக்கை.
 
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகர் ஜெய மஹால் அவென்யூவில் செயல்பட்டு வரும் நுண் உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய கோரி குளித்தலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரியார் நகர் பொது மக்கள் சார்பில் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா இல்லத்திற்கு சென்று தலைவராக பொறுப்பேற்றமைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அதன் பின்னர் கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல் குளித்தலை நகர் மன்ற துணை தலைவர் கணேசனை இல்லத்திற்கு சென்று சந்தித்து துணை தலைவராக பொறுப்பேற்றமைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அவரிடமும் மனு அளித்தனர்.  இந்நிகழ்வில் CPIM மாவட்ட செயற்குழு    உறுப்பினர் இரா. முத்துச்செல்வன், குளித்தலை நகர மதிமுக செயலாளர் சிவேஷ் வர்ஷன் மற்றும் பெரியார் நகர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.