Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுணாவின் மருத்துவ குணங்கள்

Written By Sinoj
Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (00:06 IST)
நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் பல் வலி, பல்லரணை, வீக்கம், குருதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்.
 
நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.
 
மரப்பட்டையை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்க, மஞ்சள் நிறமான சாயம் நீரில் கரையும். இந்த சாயத்தால் துணிகளுக்கு நிறமேற்றம் செயல் இருந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
 
இன்று, கடைகளில் விற்கப்படும் ‘நோனி’ என்ற நுணா சர்பத்- பல்லாயிரக்கணக்கானவர்களால் விரும்பிப் பருகப்படுகிறது. அதாவது, நுணாப்பழத்தில் இருந்து   தயாரிக்கப்படும் இது, காலரா, டைபாய்டு, காமாலை, தைராய்டு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்குவதாக ஆய்வுகள்   சொல்கின்றன.
 
புண்கள், சிரங்குகள் குணமாக நுணா இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பேதியாக 10 கிராம் நுணா வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
பல் சொத்தை குணமாக முதிர்ந்த நுணா காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊறவைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments