வியாழன், 16 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Murugan
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (08:26 IST)

உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் எடையை குறைப்பது உட்பட மேலும் சில மருத்துவ குறிப்புகளை நீங்கள் இங்கே அறிந்துகொள்ளலாம்.


 

 
1.ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, கால் தேக்கரண்டி கரு மிளகு தூள் கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
 
2.தினமும் காலையில் நன்கு வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
3.உங்கள் தொண்டையில் புண் ஏற்பட்டு அவதிபடுகிறீர்களா கவலைய விடுங்க துளசி இலை போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் காணாமல் போய்விடும்.
 
4.குழந்தைகளின் உடலை வலிமையாக்க தக்காளி மற்றும் காரட் சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் போதுமானது.
 
5.முகத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளாசி இலைகளை போட்டு குளித்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையும்.
 
6.வயிற்றில் அமிலம் சுரப்பதை குறைக்க எளிய வழி சாப்பிட்ட பின் தண்ணீரில் கருப்பட்டியை கரைத்து குடிக்கவும்.
 
7.வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதும், வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
 
8.குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் கூடிய இருமல் வந்தால் நீருடன் தேன் கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் மற்றும் கய்ச்சல் குறைந்துவிடும்.