ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (00:30 IST)

டிராகன் பழத்தில் உள்ள நன்மைகள்

இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
 
உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL  கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
 
இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், அவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன.
 
டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள் மலம் எளிதில் வெளியேற உதவி, உணவு செரிமான உறுப்புகள் வழியாக சிக்கலின்றி செரிமானமாக உதவுகிறது.
 
டிராகன் பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து  அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.
 
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்; இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
 
டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள்  இப்பழத்தை உண்ணலாம்