வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (11:42 IST)

உலகிலேயே இதான் perfect அழகு..! – டாப் 10ல் ஒரு இந்திய நடிகை!

Jodie comer
உலகிலேயே மிகவும் சரியான அழகு என்ற தரவரிசை பட்டியலில் ஒரேயொரு இந்திய நடிகை மட்டும் இடம்பெற்றுள்ளார்.

உலகில் பல அழகிகள் போட்டி நடந்தாலும் அழகு என்பதற்கான சரியான இலக்கணமாக கோல்டன் ரேஷியோ முறையில் டாக்டர் டி சில்வா ஆண்டுதோறும் வெளியிடும் ‘உலகின் மிகச்சரியான அழகிகள்’ பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

சரியான அழகிற்கான கோல்டன் ரேஷியோ அறிவியல் கணக்கீட்டு முறையில் கண், உதடு, கன்னங்கள், நெற்றி என அனைத்து முக அங்கங்களும் சரியான விகிதத்தில் இருக்கும்  பெண்கள் உலகின் மிகச்சரியான அழகிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.



அந்த வகையில் இந்த ஆண்டு உலகின் மிகச்சரியான அழகியாக 94.52 சதவீத ஒற்றுமையுடன் ஹாலிவுட் நடிகை ஜோடி கோமர் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ஸ்பைடர்மேன் படத்தில் நடித்த ஸெண்டாயா உள்ளார்.

பிரபல பாடகிகளான அரியானா க்ராண்ட் மற்றும் டெய்லர் ஸ்விப்ட் ஆகியோர் முறையே 5 மற்றும் 6-ம் இடங்களை பெற்றுள்ளனர். இந்திய நடிகை தீபிகா படுகோன் 9வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகை இவரே. ஸ்குவிட் கேம்ஸில் நடித்த கொரிய நடிகை ஹோஇயூன் ஜங் 10வது இடத்தில் உள்ளார்.

Edited By: Prasanth.K