வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (09:03 IST)

ஒரே நேரத்தில் ஓடிடி & தியேட்டரில் ரிலீஸ்! – வொண்டர் வுமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படமான வொண்டர் வுமன் ஒரே நாளில் ஓடிடி மற்றும் திரையரங்கில் ரிலீஸாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிசி காமிக்ஸின் சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் மிகவும் பிரபலாமான பெண் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரம் ‘வொண்டர் வுமன்’. ஏற்கனவே பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ’வொண்டர் வுமன்’ திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. அதில் நடித்த கேல் கடாட்டுக்கு பெரும் ரசிகர்கள் உருவானார்கள்.

மீண்டும் அதே கூட்டணியே இந்த இரண்டாவது படத்திலும் இணைந்துள்ளனர். 1984ல் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் உலக போரில் இறந்து போன வொண்டர் வுமனின் காதலன் ஸ்டீவ் திரும்ப வருவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. டைகெர் கேர்ள் இதில் வில்லியாக வருகிறார்.

கொரோனா காரணமாக சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வொண்டர் வுமன் 1984 ஒரே நாளில் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாவதாக வார்னர் ப்ரோஸ் அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று HBO Max ஓடிடி தளத்திலும், திரையரங்குகளிலும் படம் வெளியாவதாக வார்னர் ப்ரோஸ் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவும் சூழலில் தியேட்டர் செல்ல முடிந்த மக்கள் தியேட்டரிலும், செல்ல முடியாத மக்கள் வீடுகளில் இருந்தபடி ஓடிடியிலும் கண்டுகளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.