திங்கள், 26 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (10:06 IST)

ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்! – அதிர்ச்சியில் திரையுலகம்!

ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்! – அதிர்ச்சியில் திரையுலகம்!
ஆஸ்கர் விருது விழா நடந்து வரும் நிலையில் தொகுப்பாளரை மேடையில் வைத்து நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது விழா தற்போது நடந்து வரும் நிலையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் சிறந்த நடிகருக்கான விருதை கிங் ரிச்சர்ட்ஸ் படத்தில் நடித்ததற்கான வில் ஸ்மித் பெற்றார். இதற்காக அவரை விழா மேடைக்கு அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் க்ரிஸ் ராக், ஜோக் சொல்வதாக சொல்லி வில் ஸ்மித்தின் மனைவியை உருவகேலி செய்யும் வகையில் பேசினார்.

இதனால் கடுப்பான வில் ஸ்மித் மேடையில் வைத்து க்ரிஸ் ராக்கை பளார் என அறைந்தது அங்கிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் உருவக்கேலிக்கு எதிரான முதல் அடி என வில் ஸ்மித்தின் செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி பேசியும் வருகின்றனர்.