1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (19:10 IST)

தமிழில் ‘தி பேட்மேன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் ‘தி பேட்மேன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து முக்கிய ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தமிழ் படங்களுக்கு இணையாக ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தி பேட்மேன் என்ற திரைப்படம் இந்தியாவில் வரும் மார்ச் 4-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திரையரங்குகளில் ரிலீஸாகும் இந்த படத்தை திரையிட அனைத்து திரையரங்குகளும் போட்டிபோட்டு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு உள்பட பல இந்திய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது என்றும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.