1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (08:03 IST)

ஓடிடி பிளாட்பார்ம் பிசினஸில் இறங்கும் கமல்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. ரூபாய் 5 கோடி முதல் 2500 கோடிகள் வரை பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால் தயாரிப்பாளர்கள், திரை உலகினர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில திரைப்படங்கள் ஓடிடி வாயிலாக வெளியாக உள்ளன. ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இந்த வாரம் அமேசன் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. அதே போல் மேலும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை வாங்கி அவற்றை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை வைத்துள்ள தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் சுமார் பத்து படங்களை வாங்கி அவற்றை அமேசான் உள்பட ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமலஹாசனின் இந்த புதிய ஓடிடி பிசினஸ் நிச்சயம் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது