ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை: காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர் மறுப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட தேர்தலில் நிறுத்தவில்லை என்பதால் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஒருவர் மறுப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் முகமது ஆரிப் என்பவர் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்துள்ளார்
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,. பிற்படுத்தப்பட்ட மக்கள், மராத்தியர்கள், பழங்குடி இன மக்கள், முஸ்லிம்கள் என எந்த வித்தியாசம் பாராமல் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது என்றும் ஆனால் தற்போது அதன் அடிப்படை கொள்கைகளில் இருந்து மாறி இருப்பது வருத்தமடைய செய்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் இந்த கோபத்தை அவர்கள் தேர்தலின் போது காட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran