புதன், 31 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (19:29 IST)

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்....

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்....
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் இன்று வயோதிகம் காரணமாக காலமானார்.


 

 
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்ட போது, மிக அதிகமான படங்களில் ரோஜர் மூர் துப்பறிவாளராக நடித்துள்ளார். 1973 முதல் 1985ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் நடித்தார்.
 
அவருக்கு தற்போது 89 வயதாகிறது. சுவிட்ஸர்லாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார். இந்த தகவலை அவரின் குடும்பத்தினர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.