புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (21:05 IST)

பிரபல நடிகைக்கு பாலியல் கல்வி கற்றுக்கொடுத்த டிவி தொடர்

13 வயதிலேயே எனக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுத்தது நான் நடித்த கேம் ஆஃப் திரோன்ஸ் டிவி தொடர் என பிரபல ஹாலிவுட் நடிகை சோபி டர்னர் கூறியுள்ளார்.


 

 
ஹாலிவுட்டில் டிவி தொடர்களும் படங்களும் நிகராக கொண்டாடப்படுகிறது. கேம் ஆஃப் த்ரொன்ஸ் டிவி தொடர் உலக புகழ் பெற்றது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவர் சோபி டர்னர். இவர் 2011ஆம் ஆண்டு முதல் இந்த தொடரில் நடித்து வருகிறார். 
 
இவர் இதில் நடிக்க தொடங்கியபோது இவரது வயது 13. தற்போது இந்த தொடரின் 7வது சீசன் ஜூலை 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து சோபி டர்னர் கூறியதாவது:-
 
வாய்வழி பாலியல் உறவு குறித்து நான் தெரிந்துக்கொண்டது இந்த தொடரில் நடித்தபோது தான். பாலியல் கல்வி குறித்து இந்த மூலம் கற்றுக்கொண்டேன் என்றார்.