1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (13:04 IST)

நாளை ப்ளாக் விடோ ரிலீஸ்; இந்தியாவில் பார்க்க சான்ஸே இல்லை! – வருத்தத்தில் மார்வெல் ரசிகர்கள்!

பிரபல மார்வெல் ஸ்டுடியோஸின் புதிய சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் விடோ நாளை ரிலீஸாக உள்ள நிலையில் இந்தியாவில் பார்க்க வாய்ப்பு இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம் தயாரித்து கடந்த ஆண்டில் வெளியாக இருந்த படம் “ப்ளாக் விடோ”. நடாஷா ரமணாஃப் என்ற முக்கிய பெண் உளவாளி கதாப்பாத்திரம் குறித்த இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சனே ப்ளாக் விடோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து தற்போது இந்த படம் வெளியாக உள்ளது. மார்வெல் படங்கள் திரையரங்குகளில் வெளியான பின் நீண்ட நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் நிலையில் முதன்முறையாக ப்ளாக் விடோ திரையரங்கு மற்றும் ஓடிடியில் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளதாக மார்வெல் அறிவித்துள்ளது. இந்த படம் நாளை ஜூலை 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஆனால் இந்த படத்தை இந்தியாவில் வெளியிடாத நிலையில் ஓடிடியில் பார்க்கவும் வசதி செய்யப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ள டிஸ்னி ப்ளஸ் செயலி மூலமாக தனியாக பணம் செலுத்தி பார்க்கும் வசதியில் இந்த படம் வெளியாகிறது. ஆனால் இந்தியாவில் தனியாக பணம் கட்டி அதிகளவில் மக்கள் இந்த படத்தை பார்க்க மாட்டார்கள் என கருதியதால் பணம் செலுத்தி பார்க்கும் வசதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஏற்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக மார்வெல் படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில் தற்போது ப்ளாக் விடோ வெளியாகும் நிலையில் இந்தியாவில் திரையரங்குகள், ஓடிடி என எதிலும் படம் வெளியாகாதது இந்திய மார்வெல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.