1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:28 IST)

32 கிராமி விருதுகள்; சாதனை மழையில் Beyonce! – ஆச்சர்யத்தில் இசை ரசிகர்கள்!

Beyonce
இசைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பியோன்சே 32வது முறையாக கிராமி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் வழங்குவது மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுவது போல, இசைக்கு உயரிய விருதாக கிராமி விருதுகள் உள்ளன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுகளில் கண்ட்ரி, ஜாஸ், பாப், சிறந்த நடனம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு கிராமி விருதுகளில் ஹாரி ஸ்டைல்ஸ், டைலர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பலரது ஆல்பங்கள் கிராமி விருதை பெற்றுள்ளன. இந்த விருது விழாவில் சிறந்த நடனம மற்றும் எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான பியோன்செவின் ”ப்ரேக் மை சோல்” (Break my soul) பாடல் விருதை வென்றுள்ளது. சிறந்த எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் பியோன்சேவின் “ரெனேசன்ஸ் (Renaissance)” ஆல்பமும், பெஸ்ட் ட்ரெடிஷனல் ஆர் அண்ட் பி பெர்பார்மென்சில் பியோன்சேவின் “ப்ளாஸ்டிக் ஆப் தி சோஃபா (Plastic off the sofa)” பாடலும் கிராமி விருதை வென்றுள்ளன.

இதுதவிர சிறந்த ஆர் அண்ட் பி பாடலுக்கு கஃப் இட் (Cuff it) பாடலுக்காக பாடியது மற்றும் பாடல் வரிகளுக்காக மற்ற பாடகர்களிடன் கிராமியை பியோன்சே பகிர்ந்து கொண்டுள்ளார். இதன் மூலம் 32 கிராமி விருதுகளை வென்று கிராமி விருது வரலாற்றிலேயே அதிகமான விருதுகளை வென்றவராக புதிய சாதனையை படைத்துள்ளார் பியோன்சே.

Edit by Prasanth.K