ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (18:10 IST)

வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஹோலி பண்டிகை

வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஹோலி பண்டிகை
வண்ணங்களின் திருவிழா என்று வர்ணிக்கப்படும் ஹோலி பண்டிகை, வடமாநிலங்களில் களைகட்ட தொடங்கியுள்ளது. ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
 
ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தை வரவேற்கு விதமாக ஹோலி பண்டிகையை ஹிந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வட மாநிலங்களில் பிரசித்தி  பெற்ற ஒரு பண்டிகையாகும். அனைத்து மதத்தினரும் இதனை மகிழ்வுடன் கொண்டாடி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வழிவகுக்கிறது.
 
தண்ணீரில் வண்ணப்பொடிகளை கரைத்து, ஒருவர் மீது ஒருவர் தெளித்து மகிழ்ச்சியடைந்தனர். கோயில்களில் கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடமணிந்து, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  
 
ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி)  எனவும் அழைக்கப்படும்.