1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By Sasikala

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் வண்ணமயமான ஹோலி பண்டிகை!!

ஹோலி பண்டிகை வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், ஜெய்ப்பூர், குஜராத் போன்ற இடங்களிலும் நேபாளம், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள்,  தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்துக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
ஹோலிப் பண்டிகைக்கு முன் நாள் 'ஹோலிகா தகனம்' என்ற நெருப்பு மூட்டும் சடங்கு நடக்கிறது. கருவிலேயே விஷ்ணு பகவானின் பெரும் பக்தனாகத் திகழ்ந்த  பிரகலாதனைக் கொல்ல முயற்சித்த அவனது சகோதரி அரக்கி ஹோலிகாவை எரிப்பதைக் குறிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
 
கிருஷ்ணர் தனது பால்ய நாட்களைக் கழித்ததாகப் புராணங்கள் கூறும் பிருந்தாவன் நகரில் ஹோலிப் பண்டிகையன்று அங்கிருக்கும் கிருஷ்ணர் கோயில்களில்  சிறப்பு வழிபாடுகளும் ஹோலி கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
 
திருமணத்திற்கு முன்பாக கிருஷ்ணர் ராதையைப் பார்க்க வந்தபோது ராதையையும் அவரின் தோழிகளையும் கிருஷ்ணர் அளவுக்கதிகமாகக் கிண்டல் செய்திருக்கிறார். இதனால் அவருக்குப் பாடம் புகட்ட நினைத்த ராதையும் தோழிகளும் பெரிய மூங்கில் லத்திகள் கொண்டு விளையாட்டாக விரட்டியிருக்கின்றனர்.  இதனைக் குறிக்கும் விதமாக பிருந்தாவனுக்கு அருகில் இருக்கும் நந்தகோன் கிராமத்திலிருந்து ஆண்கள் ராதையின் கிராமமான ப்ரசன்னாவிற்குச் சென்று பெண்களிடம் லத்தியால் அடிவாங்கும் வித்தியாசமான சடங்கு நடக்கிறது.
 
தற்போது பிருந்தாவனில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணன் ராதையைப் பற்றிய காவியக் காதல் பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதுமாகக் கொண்டாட்டம் களைகட்டும். வண்ணமயமான இந்தப் பண்டிகையைக் கொண்டாட உள்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர்.