1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மே 2022 (08:32 IST)

மாத சிவராத்திரியில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள் !!

அறியாமல் செய்த விரதங்களுக்கே அளப்பரிய பாக்கியம் கிட்டும் என்றால் அறிந்தே நாம் மேற்கொள்ளும் சிவராத்திரி பூஜைகளுக்குக் கிடைக்கும் பலன்களை அளவிடவே முடியாது.

 
இன்று மாத சிவராத்திரி நாளில், சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.
 
சிவராத்திரி விரதம் இருப்பதும் ருத்ரம் பாராயணம் செய்வதும் சிவாலயம் சென்று நமசிவாயம் சொல்லி, சிவலிங்கத் திருமேனியை தரிசிப்பதும், சகல துன்பங்களையும் போக்கக்கூடியது.
 
இந்த அற்புதம் நிறைந்த ஆவணி மாதம் சிவராத்திரி நாளில், சிவனாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் உள்ள சிவபெருமானின் திருவுருவப் படத்துக்கு மலர்களாலும் முடிந்தால் வில்வத்தாலும் அலங்கரிக்கலாம். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். சிவபுராணம் படிக்கலாம்.
 
முடிந்தால், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு வழங்குங்கள். நம் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியுண்டாகும்.