எந்த கடவுளுக்கு எத்தனை சுற்றுகள் வலம்வருதல் வேண்டும் தெரியுமா....!

ஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை சுற்றுகள்தான் வலம் வரவேண்டும் என்று கூறப்படுகிறது. விநாயகருக்கு 1 அல்லது 3 முறை, கதிரவனுக்கு (சூரியன்) 2  முறை, சிவபெருமானுக்கு 3, 5, 7 முறை (ஒற்றைப்படை), முருகனுக்கு 6 முறை,  தட்சிணா மூர்த்திக்கு 3 முறை, சோமாஸ் சுந்தர் 3 முறை, அம்பாள் 4, 6, 8  முறை  (இரட்டைப்படை), விஷ்ணு 4 முறை, இலக்குமி 4 முறை, அரசமரம் 7 முறை, அனுமான்ம்11 அல்லது 16 முறை, நவக்கிரகத்துக்கு 3 அல்லது 9  முறையும் வல்ம் வருதல் வேண்டும்.
மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி,  மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக்  கொள்ள வேண்டும்.
 
கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது. தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை  சொற்களை பேசக்கூடாது. கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். ஆண்கள் தலைக்கு மேல் கைகூப்பி  வணங்கலாம்.பெண்கள் எப்போதும் போல் கைகூப்பி வணங்கினால் போதும்.


இதில் மேலும் படிக்கவும் :