செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (00:34 IST)

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்...

இந்த பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது, பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
 
* ஆண், பெண் என இருபாலரது தலையில் பல்லி விழுந்தாலும், அது மோதல்களுக்கு தயாராக இருக்கவும் அல்லது மரண பயத்தைக்  குறிக்கும்.
 
* இடது கண் என்றால், ஆண்களுக்கு நல்லது நடக்கும் மற்றும் பெண்களுக்கு துணையின் அன்பு கிட்டும்.
 
* வலது கண் என்றால், ஆண்களுக்கு எதிலும் தோல்வியே கிடைக்கும் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தம் மேலோங்கும்.
 
* மேல் உதட்டில் பல்லி விழுந்தால் ஆண், பெண் இருவருமே மோதல்களுக்கு தயாராக இருக்கவும் என்பதற்கான அர்த்தமாகும். அதுவே கீழ் உதடு என்றால், பெண்களுக்கு புதிய பொருட்கள் கிட்டும் மற்றும் ஆண்கள் நிதி லாபங்களை எதிர்பார்க்கலாம்.
 
* வலது பாதத்தில் பல்லி விழந்தால், நோயால் கஷ்டப்படக்கூடும். அதுவே இடது பாதத்தில் விழுமாயின், அது அவருக்கு கெட்டது நடக்கப்  போவதைக் குறிக்கும்.
 
* பல்லி மார்பு பகுதியில் விழுந்தால், ஆண், பெண் இருபாலருக்குமே நன்மை தான் விளையும்.
 
* ஆண் மற்றும் பெண்களுக்கு வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால், கெட்ட சகுணம். அதுவே இடது மணிக்கட்டில் என்றால் அதிர்ஷ்டம்.
 
* வலது தோள்பட்டையில் பல்லி விழுந்தால், எதிலும் வெற்றி கிட்டும். அதுவே இடது தோள்பட்டை என்றால், பேரின்ப செய்தியைக் கேட்கக்  கூடும்.
 
* வலது கை விரல்களில் ப-ல்லி விழுந்தால், பரிசைப் பெறுவீர்கள், அதுவே இடது கை விரல்கள் என்றால் கவலைப்படக்கூடும்.
 
* சாதாரணமாக எந்த தொடையில் பல்லி விழுந்தாலும், அது கெட்ட சகுணத்தைக் குறிக்கும்.
 
* கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால், அது ஒருவருடனான பகைமைத் தொடரும். இடது பக்கத்தில் விழுந்தால் எதிலும் வெற்றி  கிடைக்கும்.