வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (00:23 IST)

நவக்கிரகங்கள் பாவ விமோசனம் பெற்ற தலங்கள் பற்றி அறிவோம்

மனிதர்கள் வாழ்க்கையில் அறத்தை பின்பற்றி வாழவும், ஒழுங்குக்குள் வரவும்,சில சட்ட திட்டங்களை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவற்றை பாரபட்சம் இன்றி செயல்படுத்தி வருபவர்கள் நவக்கிரகங்கள். 
 
மனிதர்களை ஆட்டிப் படைக்கும் நவக்கிரகங்களுக்கும் இன்ப, துன்பம் என்னும் காலச்சக்கரம் உண்டு. அவர்களின் பாபங்களையும் சாபங்களையும் தீர்த்துக்  கொள்ள தவம் இருந்த தலங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம். 
 
நவக்கிரகங்கள் பாவ விமோசனம் பெற்ற தலங்கள்:
 
சூரியன்: சூரியனார் கோயில், பாபநாசம் பாபநாசர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).
 
சந்திரன்: திருவாரூர் தியாகராஜர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில், சேரன்மகாதேவி அம்மையப்பர் கோயில் (நெல்லை மாவட்டம்).
 
செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோவில், பழநி.
 
புதன்: மதுரை, திருவெண்காடு.
 
குரு: திருச்செந்தூர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்.
 
சுக்கிரன்: கஞ்சனூர் சுக்கிரபுரீஸ்வரர் கோயில் (சூரியனார்கோவில் அருகில்).
 
சனீஸ்வரன்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில், மதுரை அழகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர் கோயில்.
 
ராகு: திருநாகேஸ்வரம்.
 
கேது: கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் (நாகப்பட்டினம் மாவட்டம்).