ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (14:30 IST)

ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுவது ஏன்...?

Aadi - Amman 1
அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு கள் நடைபெறும் ஆடி மாதத் தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள்  வழிபாட் டுக்கு மிகவும் உகந்தது.


ஆடி மாதம் பண்டிகைகளை அழைக் கும் காலம்' என்பர். மழைக்கா லம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில்,வீட்டு வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்க ரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள்.

பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம் பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு.

ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்த காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான கூழ் போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.