1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. chithirai function in thirukalugundram festival

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா: தேதி அறிவிப்பு..!

திருக்கழுக்குன்றம்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சித்திரை திருவிழா தொடங்கி விறுவிறுப்பாக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த திருவிழா மே 4ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மலைக் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என்றும் அறிவித்துள்ளனர். 
 
சித்திரை திருவிழா முதல் நாள் இரவு பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் விக்னேஸ்வர பூஜை சாந்தி வழிபாடு ஆகியவை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். ஏப்ரல் 27ஆம் தேதி 63 நாயன்மார் கிரிவலம் மற்றும் மே ஒன்றாம் தேதி பஞ்சமூர்த்தி சுவாமி திருத்தேரில் வீதி உலா நடைபெறும் என்றும் பக்தர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகும் ராசிகள்! இன்றைய ராசிபலன் (18-04-2023)!