1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Tirupathi hundi collection rs.100 crore in october

8வது மாதமாக செஞ்சுரி அடித்த திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.100 கோடி உண்டியல் வசூல்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உண்டியல் வசூல் 100 கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 8 மாதமாக திருப்பதி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.100 கோடியை தாண்டி வருகிறது என்பதும் ஜூலை மாதத்தில் மட்டும் 139 கோடியை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எட்டாவது மாதமாக அக்டோபர் மாதம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது ]
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது 
 
அதேபோல் இனிவரும் காலங்களிலும் 100 கோடிக்கு மேல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்