மகாவிஷ்ணுவிற்கு உகந்த திருவோண நோன்பு !!
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும்.
திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். செல்வச்செழிப்பு, குழந்தைப்பேறு அருளும் திருவோண விரதம்.
தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் சிங்க மாதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாநிலத்தவர்களின், ஆண்டு தொடக்க மாதமும் அதுதான். அந்த சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.