செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (17:15 IST)

விநாயகரின் முப்பத்திரெண்டு திருவுருவங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Lord Ganesha
1. ஸ்ரீபால விநாயகர்: குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை.


2 .ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர், நாவற்பழ ம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3. ஸ்ரீ பக்தி விநாயகர்: அறுவடை கால முழ நிலவு போல் ஒளிரும் சாம்பல நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம், தேங் காய்,கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள்.

4.  ஸ்ரீ வீர விநாயகர்: வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர் க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு அங்குசம், மழ, குந்தாலி, சம்மட்டி, சூலம், வாள்,சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5.  ஸ்ரீ சக்தி விநாயகர்: தனது சக்தியரில் ஒருவ்ரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்க் கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந் த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6. ஸ்ரீ துவிஜ விநாயகர்: நான்கு முக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமா லை,தண்டம், கமண்டலம்,ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7. ஸ்ரீ சித்தி விநாயகர்: எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி,மாம்பழம்,பாசு,கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள்,துதிக்கையில் எள்ளுருண்டை.

8. ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்: பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜி ர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9. ஸ்ரீ ஷிப்ர விநாயகர்: வரந்தரு விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10. ஸ்ரீ விக்ன விநாயகர்: விக்கினங்க ளின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்க ரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொ ழக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11. ஸ்ரீ ஹரம்ப விநாயகர்: சிங்கவாகன த்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண் ணிறமேனி.அபயகரம்,தந்தம்,மலர்மாலை,அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழக்கட்டை கொண்ட பத்து கரம்.

12. ஸ்ரீ லட்சுமி விநாயகர்: வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர் களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்கு சம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கு ம்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13. ஸ்ரீ மகர விநாயகர்: மூன்று கண்களு டன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாது ளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கர ம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகி யவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14. ஸ்ரீ விஜய விநாயகர்: மூஷிக வாகனத் தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15. ஸ்ரீ நிருத்திய விநாயகர்: ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபி நயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16. ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்: இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவி யை அணைத்த வண்ணமுள்ள பொன்னி ற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில்,தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17. ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்: பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம் மலர் மாலையும் அணிந்து குட்டைக் கை கால்களை கொண்டு பத்மாசன நிலையி ல் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18. ஸ்ரீ வரத விநாயகர்: வரம் தரும் பிறை சூடிய முக்கண், செந்நிற மேனி, தேன் கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்: ஆடும் காது களில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான் கு கரங்கள் தும்பிக்கையில்கொழக்கட்டை பொன்னிற மேனி.

20. ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்: பிறையு டையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக் கையில் மாதுளம் பழம்.

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்: மஞ்சள் ஆடை யுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குச ம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள். ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீ:

22. ஸ்ரீ ஏகதந்த விநாயகர்: பெருத்த வயி று, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக் கொ ண்ட நீல மேனி.

23. ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்: தந்தம், அங்கு சம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24. ஸ்ரீஉத்தண்ட விநாயகர்: வலது கையி ல் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவி யை இடது கையால் அணைத்துள்ள செந் நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம்,நெற்கதிர், கரு ம்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25. ஸ்ரீருணமோகன விநாயகர்: செம்பட்டு டுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26. ஸ்ரீ துண்டி விநாயகர்: நின்ற கோலத் தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி. தந் தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திர ம் தாங்கிய நான்கு கரங்கள்.

27. ஸ்ரீ இருமுக விநாயகர்: இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28. ஸ்ரீ திரிமுக விநாயகர்: அபயம், அக்க மாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி. மகேஷ் சுவாமிஜீ:

29. ஸ்ரீ சிங்க விநாயகர்: சிங்க வாகனத் தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்க்ரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30. ஸ்ரீ யோக விநாயகர்: யோக ஆசனத் தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31. ஸ்ரீ துர்க்கா கணபதி: அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம். ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீ:

32. ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்: துயரங்க ளைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியி ல் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடை ய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.